பெயர்: மா.தமிழரசன்
ஊர்: ராமமூர்த்தி நகர்
மாவட்டம்: சேலம்.
2014 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.E.mechanical engineering பயிலும் போது என்னுடைய physical trainer (திரு. யோகராஜ்) அவர்கள் என்னை அழைத்து சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி ஒன்றில் YSL selection நடக்கஉள்ளது அதில் நீ பங்கு பெறுமாறு அழைப்புகள் விடுத்தார்.நானும் அங்கு சென்று என்னுடைய திறமைக்கு தகுந்தவாறு விளையாடினேன் அதில் தகுதியும் பெற்றேன்..பின் அதே ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டம் AVVM SREE PUSPAM COLLEGE,POONDI யில் ஒரு 30 நாட்கள் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது,அதிலும் யோகாசனம்,மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் நன்முறையாக பயிற்சியும் அளிக்கப்பட்டது, இதனால் எங்களின் உடலும் ஆட்டத்திறனும் மேலும் வலுப்பெற்றது, பின்பு தஞ்சையில் பயிற்சி முடிந்த சில மாதங்களிளேயே சென்னையிளுள்ள stag மைதானத்தில் turf wicket-ல், தலைச் சிறந்த பயிச்சியாளர்களால் 40நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது, அதுமட்டுமல்லாமல் நாங்கள் அனைவரும் கிராம் புற இடங்களில் இருந்து வந்தமையால் முதலில் turf wicket யில் விளையாட சற்றுத்தயங்கினோம்,இதனால் எங்களுக்கு மேலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது இப்பயிற்சியினால் எங்களின் ஆட்டத்திறன் மேலும் வலுப்பெற்றது, பின் 2016 -ஆம் ஆண்டு சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் எங்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுக்கப்பட்டது,அதன் பின் YSL முதலாம் ஆண்டு போட்டிகளில் voice snap அணிக்காக vice captain-ஆக தேர்வு செய்யப்பட்டேன்,மேலும் என் அணியின் வெற்றிக்கு நானும் என் அணியினரும் தீவிரமாக பாடுபட்டோம்,யாரும் எதிர்ப்பார்க்காத அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்தோம். பின் இறுதிப்போட்டியில் மாம்பழம் ஐயர்ஸ் அணிக்கு எதிராக எங்கள் அணி இளம் கண்டது, toss வென்று எதிரணியினர் எங்களை மட்டை வீச்சில் ஈடுபடுமாறு கேட்டனர்,அவர்கள் பனித்தபடி நாங்களும்ச மட்டை வீச்சுக்குச தயாராகினோம், தொடக்கம் சிறப்பாக அமைய எங்கள் அணியின் ஓட்டங்கள் சிறப்பாக இருந்தது பின் சீரான இடைவெளியில் wickets-ஐ பறிகொடுத்தோம் இறுதியில் 20 ஓவர் முடிவில் 111 மட்டுமே எடுக்கமுடிந்தது, 112 என்ற எளிய இலக்குடன் எதிரணியினர் களம் கண்டனர் எங்களுடைய பந்து வீச்சு திறமையால் எதிரணியினர்-ஐ பந்தாடினோம் 60 ஓட்டங்களுக்கு 7 wickets இழந்த எதிரணியினர் நெடுநேர போராட்டத்திற்கு பிறகு ஆட்டத்தை சமண் செய்தனர்,அதன் பின் super over கொண்டு வந்ததன் பலனாக எதிரணியினர் வெற்றி வாகை சூடினர்..இந்த ஆட்டத்தை எளிதில் யாரும் மறந்து விட முடியாது அளவுக்கு நாங்கள் விளையாடினோம், இறுதிப்போட்டியில் தோல்வியுற்றாலும் மற்ற எல்லா அணி வீர்ர்களும்,நடுவர்களும், அணியின் நிர்வாகிகளும் எமது அணியையே சிறந்த அணி என போற்றினர். இத்தருனம் என்றும் மறவாத தருனமாய் என் வாழ்வில் அமைந்தது... மற்றும், இதனால் சென்னையில் சில பல அணிகளுக்கு விளையாடி வந்தேன்.
தற்போது தருமபுரி அணிக்காக TNCA நடத்தும் மாவட்ட அளவிளான ஆட்டங்களில் விளையாடி வருகிறேன். பற்றும் ஏதோ ஓர் கிராமத்தில் வெறும் stumper, டென்னிஸ் பந்துகளில் cricket விளையாடி கொண்டிருந்த என்னை தேர்வு செய்து நல்வழியில் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய என் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் YSL நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
பின், YSL -2 க்கு என்னை அழைத்தமைக்கு திரு.ஞானவேல் ஐயா விற்க்கும்,திரு.குமார் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.